வெள்ளி, 23 டிசம்பர், 2016

மார்கழி மாதக் கோலங்கள்-1

ந்த மார்கழியின் முதல் ஐந்து நாட்களை அலங்கரித்த கோலங்கள் இங்கே...
என் வலைப்பூவுக்கு வந்து கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி.

கோலங்கள் எப்படியிருக்கு?

-தோழமையுடன்..,

நித்யாகுமார்.


வியாழன், 15 டிசம்பர், 2016

கோலங்கள் - 4


கோலங்கள் - 3


திருக்கார்த்திகை கோலங்கள்

கார்த்திகை தீபத் திருநாளில் எங்கள் வீட்டு வாசலை அலங்கரித்த கோலங்களும் (தொடர்ந்து மூன்று நாள் தீபம்) தீபத் திருநாளன்று எங்கள் வீட்டில் ஏற்றப்பட்ட தீபங்களும்... வெடிப்போட்ட ஸ்ருதியும் விஷாலும்.... எங்க வீட்டு வாசலில் நிற்கும்  செம்பருத்தியின் பூவும்....

நன்றி.

நட்புடன்....
நித்யா குமார்.

வெள்ளி, 2 டிசம்பர், 2016

கோலங்கள்-2

கோலங்களை ரசித்துப் போடுவது எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதுவும் மார்கழி மாதக் குளிரில் அதிகாலை 3.30 மணிக்கெல்லாம் எழுத்து கோலம் போட்டு கலர் கொடுத்து அழகான கோலத்தில் லயித்து அதை ஒரு போட்டோ எடுத்து நிமிரும் போது மெல்லப் பொழுது விடிந்து குருவிகளில் சபதம் கேட்கும் போது விஷால் ஓடி வந்து 'சூப்பரா இருக்குல்ல' என்றபடி மொபைலை வாங்கி அவன் ஒரு போட்டோ எடுத்து உடனே அவங்க அப்பாவுக்கு அனுப்பிடுவான். இன்றும் சில கோலங்கள் உங்கள் பார்வைக்கு...பிடிச்சிருக்கா?

நன்றி.செவ்வாய், 29 நவம்பர், 2016

கோலங்கள்-1

சென்ற ஆண்டு மார்கழி மாதம் எங்கள் வீட்டு வாசலை அலங்கரித்த  கோலங்களில் சில இங்கே... 
கோலங்கள் பிடித்திருந்தா?

கோலங்களின் வரிசை தொடரும்....

நன்றி.
வெள்ளி, 25 நவம்பர், 2016

முதல் பதிவு

Image result for முதல் பதிவு


வணக்கம்...

இதுவரை வலைப்பூ உலகிற்குள் வராமல் இருந்த நான் இன்று முதல் வலையுலகில் அடி எடுத்து வைக்கிறேன். நான் போட்ட மார்கழி மாத கோலங்களை எல்லாம் என்னவர் தனது வலையில் அவ்வப்போது பதிவிட்டு வந்தார். இன்று எதார்த்தமாக ஏதோ கூகிளில் தேட,  நான் வரைந்து, என்னவர் பகிர்ந்த கோலங்கள் எல்லாம் ஏதேதோ தளங்களில் வெளியாகி இருக்கின்றன. எனவே நானும் வலை தொடங்கி மார்கழிக் கோலங்கள் முதல் என் மன எண்ணங்கள் வரை பதியலாம் என்ற எண்ணத்தில் களத்தில் இறங்கியாச்சு. உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்.

நன்றி.

என்றும் அன்பில்
நித்யா குமார்.